உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நள்ளிரவில் பைக் எரிந்து சேதம்: போலீஸ் விசாரணை

நள்ளிரவில் பைக் எரிந்து சேதம்: போலீஸ் விசாரணை

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் நள்ளிரவில் மர்மமான முறையில் பைக் தீப்பிடித்து எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பெண்ணாடம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வீரமோகன். 41. வி.சி., முன்னாள் நகர துணை செயலாளர். இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டுவாசலில் நிறுத்தி விட்டு துாங்கச்சென்றார். நள்ளிரவு 1:00 மணியளவில் பைக் மர்மமான முறையில் எரிவதை கண்டு வீரமோகன் கூச்சலிட்டார். அருகிலுள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் பைக் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது சைக்கிள் தீப்பிடித்து எரிந்து சேதமானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை