தடுப்புக் கட்டையில் பைக் மோதல்: இருவர் பரிதாப பலி
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கழிவுநீர் கால்வாய் தடுப்பில் பைக் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விருத்தாசலம் அடுத்த ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முனுசாமி மகன் மனோஜ், 26, செல்வராஜா மகன் ஆனந்தராஜ், 26, அரியலுார் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த சோலையூர் சுப்பராயன் மகன் சுபாஷ், 27. மூவரும் நேற்று மாலை யுனிகார்ன் பைக்கில் சென்றனர். மனோஜ் பைக்கை ஓட்டினார்.கருவேப்பிலங்குறிச்சி - ஜெயங்கொண்டம் சாலையில் சென்றபோது, நிலைதடுமாறிய பைக், வேட்டக்குடி கிராம சந்திப்பில் உள்ள கழிவுநீர் வடிகால் தடுப்பில் மோதியது. அதில், படுகாயமடைந்த மனோஜ், ஆனந்தராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுபாஷ் காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.