மேலும் செய்திகள்
மணல் கடத்தல் லாரி பறிமுதல்
06-Nov-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சாக்கு மூட்டையில் ஆற்றுமணல் கடத்திய பைக்கை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நேற்று தேவங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் பைக்கில் சாக்கு மூட்டைகளில் ஆற்றுமணல் கடத்திச் சென்றது தெரிய வந்தது. போலீசார் வருவதை பார்த்த பைக் ஓட்டுநர் மணல் மூட்டைகளுடன் பைக்கை அங்கேயே விட்டு தப்பியோடினார். இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பைக் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
06-Nov-2025