உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல்: 5 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு:வீட்டுமனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் நடுத்தெருவை சேர்ந்த கோதண்டபாணி மனைவி குணசுந்தரி,44; அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் மனைவி ருக்குமணி,40; இருவருக்கும் இடப்பிரச்னை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது. இந்நிலையில் ருக்குமணி அப்பகுதியில் உள்ள தமது வீட்டு மனையை சுத்தம் செய்த போது கோதண்டபாணி, மனைவி குணசுந்தரி, மகன் கோபிநாத் ஆகிய 3 பேரும் சேர்ந்து, ருக்குமணி, மகன் பாரதியை தாக்கினர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இருதரப்பு தாக்குதலில் படுகாயமடைந்த கோபிநாத், ருக்குமணி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து கோதண்டபாணி, குணசுந்தரி, கோபிநாத், ருக்குமணி, பாரதி ஆகியோரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை