உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாவட்டத்தில் இரு தொகுதிகள் மீது பா.ஜ., குறி

 மாவட்டத்தில் இரு தொகுதிகள் மீது பா.ஜ., குறி

க டலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில், திட்டக்குடி மற்றும்காட்டுமன்னார்கோவில் தனித்தொகுதிகளாகும். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், திட்டக்குடிதொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., சார்பில் தடா பெரியசாமி போட்டியிட்டு,தற்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் தோல்வியுற்றார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் கடலுார் மாட்டத்தில், கண்டிப்பாக ஒருதொகுதி மட்டும் நிச்சயம் என கருதும், பா.ஜ., வின் முக்கிய நிர்வாகிகள் பலர் அவரவர்களுக்கு சாதகமான வகையில், உள்ள தொகுதிகளை கேட்டு, 'சீட்டை' பெற வேண்டும்என்ற எண்ணத்தில், பா,ஜ., மேலிட பொறுப்பாளர்களிடம் காய் நகர்த்தி வருகின்றனர். தற்போது கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக, திட்டக்குடியை சேர்ந்த முன்னாள்எம்.எல்.ஏ., தமிழ் அழகன் உள்ளார். இவர், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில்,தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு, தி.மு.க., கூட்டணியில், வி.சி., சார்பில்போட்டியிட்ட, தற்போதைய காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ.,சிந்தனை செல்வனை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன் பின்பு, 2016, 2021, என இரு முறையும், திட்டக்குடி தொகுதியில், தி.மு.க., நேரடியாகபோட்டியிட்டு கணேசன் தொகுதியை தக்கவைத்து வருகிறார். இந்நிலையில், இந்த முறை பா.ஜ.,சார்பில், திட்டக்குடி தொகுதியை பெற்று, கணேசனை எதிர்த்து போட்டியிடலாமா, அல்லது,அ.தி.மு.க., சார்பில் முருகுமாறனுக்கு வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதால், காட்டுமன்னார்கோவில்தொகுதியை கேட்டு பெறலாமா என மாவட்ட தலைவர் தமிழ் அழகன் மட்டுமின்றி பா.ஜ., பட்டியல் அணி நிர்வாகிகள், பலரும்,திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதி மீது கண் வைத்து, காய் நகர்த்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்