மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
27-Apr-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி இரண்டு நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மனைவி முத்துலட்சுமி,77; இவர், கடந்த 17ம் தேதி, மாலை வீட்டு அருகே உள்ள மாரியம்மன் கோவில் ஓடையை கடக்க முயன்றார்.அப்போது, அப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், ஓடையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார். ஆலடி போலீசார், மங்கலம்பேட்டை தீயணைப்பு துறையினர் 2 நாட்களாக மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.திடீர் காட்டாற்று வெள்ளத்தால், மூதாட்டி ஓடை மணலில் புதைந்திருக்கலாம் என்ற கோணத்தில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஓடை மண்ணை தோண்டி, தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று ஓடை தண்ணீர் சென்று சேரும் மாத்துார் ஏரியில் மிதந்த மூதாட்டி சடலத்தை மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் மீட்டனர். இச்சம்பவம் குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Apr-2025