அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், ரோட்டரி சங்கம் சார்பில், தாய்ப்பால் வார விழா நடந்தது. சங்க தலைவர் அன்புகுமரன் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவர் சுவாமிநாதன், மருத்துவர்கள் கோவிந்தமுருகன், அய்யப்பன், குழந்தை மருத்துவர்கள் இந்துமதி, அனிதா, மகப்பேறு மருத்துவர் ஐஸ்வர்யா, செவிலியர் கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தாய்மார்களுக்கு பிரட், பிஸ்கட், டவல் உள்ளிட்டவைகள் வழங்கினார். நிர்வாகிகள் இன்ஜினியர் சாமுவேல் கென்னடி, சம்பத், பிரகாஷ், கார்த்திக், ராஜ்குமார், வள்ளி நாயகம், பிரதீப் உ ள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார்.