உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணனை தாக்கிய தம்பி கைது

அண்ணனை தாக்கிய தம்பி கைது

நடுவீரப்பட்டு: அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த கரும்பூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன்,63;அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன்,58; சகோதரர்கள். இருவருக்கும் வழி சம்மந்தமாக முன்விரோதம் இருந்தது. இருவரும், உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்ற போது தகராறு ஏற்பட்டது. அப்போது, கலையரசனை, கண்ணதாசன் மற்றும் இவரது மகன்கள் தினகரன்,ஜெயசீலன் ஆகிய மூன்று பேர் தாக்கி கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கண்ணதாசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை