உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே 7 பேரை கடித்து அச்சுறுத்திய கதண்டுகளை, தீயணைப்பு துறையினர் அழித்தனர்.விருத்தாசலம் அடுத்த கவனை கிராமத்தில் பழமையான புளியமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள், நேற்று முன்தினம் பரமசிவம் மனைவி விசாலாட்சி,80; முருகானந்தம் மனைவி யமுனா, 44, உள்ளிட்ட 7 பேரை கொட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் பி.டி.ஓ.,க்கள் சங்கர், ஜெயக்குமாரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் அன்று இரவோடு இரவாக தீப்பந்தம் கொண்டு கதண்டு கூடுகளை முற்றிலுமாக அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ