உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தட்டை டோல்கேட் முற்றுகை பஸ் உரிமையாளர்கள் முடிவு

கொத்தட்டை டோல்கேட் முற்றுகை பஸ் உரிமையாளர்கள் முடிவு

கடலுார்: கடலுார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டம், கடலுாரில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார்.தாலுகா செயலாளர் சதிஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடலுார் சிதம்பரம் வழித்தடத்தில் கொத்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி நிர்ணயித்துள்ள கட்டணம், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் விட அதிகமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.அதனால் விழுப்புரம் நாகப்பட்டினம் சாலை பணிகள் முழுமை அடையாமல் கட்டணம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிறுத்த வேண்டும். சாலைப்பணிகள் முடிவடைந்த பிறகே கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளதை கண்டித்து கொத்தட்டை சுங்கச்சாவடி திறக்கப்படும் 23ம் தேதியன்று சுங்கச்சாவடியில் பஸ்களை நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ