உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

விருத்தாசலம்: விருத்தாசலம் அன்புமணி நகரை சேர்ந்தவர் கல்யாணமுருகன். பஸ் நிலையம் அருகே மேத்தா காம்ப்ளக்சில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இதன் அருகே, வி.என்.ஆர்., நகரை சேர்ந்த குமார் என்பவர், இ -சேவை மையம் நடத்தி வருகிறார்.நேற்று காலை 8:30 மணியளவில் இருவரும் கடைக்கு வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு, ஷட்டர்கள் திறந்து கிடந்தன. ஸ்டூடியோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கேமராக்கள், 4 பென் டிரைவ், இ-சேவை மையத்தில் முக்கால் அடி உயர முருகன் பீங்கான் சிலை, பென் டிரைவ், ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ