உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் கார் விபத்து: டிரைவர் பரிதாப சாவு

கடலுாரில் கார் விபத்து: டிரைவர் பரிதாப சாவு

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே சென்டர் மீடியனில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த டிரைவர் உயிரிழந்தார்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வள்ளுவகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்குமார், 45. இவரது உறவினர் சிங்கப்பூரில் இருந்து வருவதால் அவரை அழைப்பதற்காக சரவணன் மனைவி காயத்ரி, 28, வைத்தியநாதன், 76, சரவணன் மகன் ஆனந்த், 12, மகள் ரித்திகா, 11, ஆகியோரை மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை சிதம்பரத்திலிருந்து புறப்பட்டார்.காரை தனுஷ்குமார் ஓட்டிச்சென்றார். இரவு 8:00 மணியளவில், கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிகுப்பம் மேம்பாலம் அருகே வந்தபோது, அங்கிருந்த சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த தனுஷ்குமார், காயத்ரி, வைத்தியநாதன் உட்பட ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 10.30 மணிக்கு தனுஷ்குமார் உயிரிழந்தார். விபத்து குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை