ஆரோக்கியமான உணவு முறை தேவை இருதய நிபுணர் கல்யாணராமன் விளக்கம்
புகை பிடிப்பதை தவிர்த்தால் இருதய பிரச்னை குறையும் என, கடலுார் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை டாக்டர் கல்யாணராமன்கூறினார்.அவர் மேலும், கூறியதாவது:இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவைஇருதய நோய் ஏற்பட காரணங்களாகும். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளைதவிர்த்து, தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்காத உணவு பழச்சாறுகளை தேர்வுசெய்து ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.சத்து நிறைந்த காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். உப்பு நிறைந்த மற்றும்பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும்உடற்பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் என, வாரத்தில் 5 நாட்கள் செய்யவேண்டும்.தினசரி பணிகளில் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். புகை பிடிப்பது, புகையிலைபயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலமாக இருதய ஆரோக்கியத்தைமேம்படுத்த முடியும். புகை பிடிப்பதை கைவிட்ட 2 ஆண்டிற்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது. புகை பிடிப்பதை தவிர்ப்பதன் மூலமாகஇருதய பிரச்னைகளை குறைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.