உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: பைக்குகள் மோதி கொண்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், பட்டீஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை,46; இவர் அதே பகுதியில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு,தமது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் புதுக்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் ஓட்டி வந்த பைக், ஏழுமலை ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதை தட்டி கேட்ட ஏழுமலையை, ராஜசேகர் தாக்கி, திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை