மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
25-Oct-2024
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ் விற்ற இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்து, விற்க முயன்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், சித்தலுார் அப்பாவு மகன் வெங்கடேசன், 36, ஆரோக்யசாமி மகன் ஸ்டாலின், 38, என்பது தெரிந்தது. இருவர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Oct-2024