அ.தி.மு.க.,வினர் 10 பேர் மீது பண்ருட்டியில் வழக்கு
பண்ருட்டி : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பண்ருட்டியில் பிரசாரம் செய்தார். இவரை வரவேற்க அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்திருந்தனர்.இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷணம் உட்பட 6 பேர் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக அம்பேத்கர் நகர் கண்ணன் மகன் ஆகாஷ்,22; உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.