மேலும் செய்திகள்
தந்தை, மகனுக்கு கொலை மிரட்டல்
06-Sep-2025
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அ ம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் சரவணன், 40; அதே பகுதியை சேர்ந்த சேகர். இருவருக்கும் மதில் சுவர் தொடர்பான முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், சேகர் மனைவி தையல்நாயகி, மகன் முத்து குமரன் ஆகியோர் சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், தையல்நாயகி, முத்துகுமரன் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
06-Sep-2025