மேலும் செய்திகள்
ஆடு திருடிய 2 பேர் கைது
19-Oct-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கடனை திருப்பி கேட்டவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த டி.புதுார் மேற்குதெருவை சேர்ந்தவர் முத்துகுமரன்.இவரது உறவினர் ஒதியடிக்குப்பத்தை சேர்ந்த தில்லைநாயகம். தில்லைநாயகம்,அதே பகுதியை சேர்ந்த காசிநாதனுக்கு 2 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருந்தார்.கடனாக கொடுத்த பணத்தினை பலமுறை கேட்டும்,காசிநாதன் வாங்கிய பணத்தினை கொடுக்கவில்லை. இதனால் தில்லைநாயகம்,முத்துகுமரன், இவரது அண்ணன் ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் ஒதியடிக்குப்பத்தில் உள்ள காசிநாதனிடம் வீட்டிற்கு சென்று பணத்தினை கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காசிநாதன்,இவரது தம்பி சந்தோஷ்குமார்,உறவினர் பாண்டியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தில்லைநாயகம்,முத்துகுமரன்,ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் காசிநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Oct-2025