உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிபாலன், 34; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணி. இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், மணிபாலன் அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மணி தனது ஆதரவாளர்களான திருஞானசம்மந்தம், இளவரசன் ஆகியோருடன் சென்று, மணிபாலனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், மணி உட்பட 3 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி