மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு
04-Nov-2024
குள்ளஞ்சாவடி: பெண்ணைத் தாக்கி அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த திம்மராவுத்தன்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மனைவி பிரியா, 36; நேற்று முன்தினம் இவரது வீட்டிலிருந்து வெளியேறிய மழைநீரை, அருகில் வசிக்கும் முருகையன் குடும்பத்தினர் அணை போட்டு தடுத்ததால், இரு குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.இதில் முருககையன் மனைவி திலகவதி, பிரியாவை தாக்கி அவரது கணவர் ஏகாம்பரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் முருகையன், திலகவதி, பாலாயி, ராஜலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Nov-2024