உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயிர்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு  

பயிர்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு  

நடுவீரப்பட்டு : விவசாய பயிர்களை சேதப்படுத்திய 4 பேர் மீது போலீ சார் வழக்குப் பதிந்தனர். நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, நடுத்தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன்,68; இவர் சிலம்பிநாதன்பேட்டையில் உள்ள தனது நிலத்தில் வாழை, முந்திரி பயிரிட்டுள்ளார். சாத்தமாம்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் குடும்பத்தினருக்கும், வைத்தியநாதனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் ரங்கநாதன் மகன்கள் கபிலன், தேவநாதன், புகழேந்தி, உறவினர் கலைச்செல்வன் ஆகியோர் வைத்தியநாதன் நிலத்தில் இருந்த வாழை மரக்கன்றுகள் மற்றும் சொட்டு நீர் பாசன பைப்புகளை சேதப்படுத்தினர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், கபிலன், தேவநாதன், புகழேந்தி, கலைச்செல்வன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை