உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி, ;முன்விரோத தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தராஜ்,40; சீனிவாசன், 44; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த சீனிவாசன் மனைவி ஜெயா கடலுார் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ஆனந்தராஜ், சீனிவாசனின் மகன்கள் அஜய், ஜெய் உட்பட 5 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை