மேலும் செய்திகள்
கோவிலில் தகராறு இரண்டு பேர் கைது
26-Oct-2025
விருத்தாசலம்: டிராக்டரை திருப்பியதில் ஏற்பட்ட மோதலில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்,35; இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் விவசாய வேலை முடித்துவிட்டு, விருத்தாசலம் - ஆலடி சாலையில் டிராக்டரில் வீட்டிற்கு சென்றார். அப்போது ரமேஷ் டிராக்டரை திடீரென திருப்பினார். இதில் பின்னால் பைக்கில் வந்த வயலுாரை சேர்ந்த காசிநாதன் மகன் அன்புச்செழியன் என்பவருக்கும், ரமேஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ரமேஷ், அன்புச்செழியன் தரப்பினர் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் அன்புச்செழியன், ஆதரவாளர் புதுக்குப்பம் அருண்குமார், விஷ்வா மற்றும் ரமேஷ், ஆதரவாளர் சூர்யா உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Oct-2025