மேலும் செய்திகள்
டாடா ஏஸ் வேன்கள் மோதல் மூதாட்டி கை துண்டிப்பு
07-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நண்பரை பார்க்க வந்த இருவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விருத்தாசலம், சக்தி நகரைச் சேர்ந்தவர் அஸ்வந்த். இவருக்கு கம்மாபுரத்தில் விபத்து ஏற்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது, அவரை பார்க்க நண்பர்கள் பிரான்சிஸ், அபினேஷ் ஆகிய இருவரும் வந்தனர்.அப்போது, அஸ்வந்த் தாய் கவிதாவுடன் வந்த, முகிலன், நீலாம்பர், தாரிக் உள்ளிட்ட 5 பேர், அஸ்வந்திற்கு விபத்து ஏற்பட காரணம் நீங்கள்தான் என கூறி, பிரான்சிஸ், அபி னேஷ் ஆகிய இருவரையும் அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், முகிலன், நீலாம்பர் உள்ளிட்ட 5 மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
07-Jul-2025