மேலும் செய்திகள்
முதியவர் சாவு போலீசார் விசாரணை
04-Sep-2025
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே இடம் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்த இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கன்னியாகுமரன். அதே பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இருவ ருக்குமிடையே இடம் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரன், பஞ்சமூர்த்தி, ஐஸ்வர்யா உட்பட 6 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Sep-2025