மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல்; 7 பேர் மீது வழக்கு
12-Dec-2024
விருத்தாசலம் : இட பிரச்னை தொடர்பாக இரு தரப்பு புகாரின் பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூரை சேர்ந்தவர்கள் சசிகுமார், அண்ணாதுரை. இருவருக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக விருத்தாசலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் தகர ெஷட் அமைத்தது குறித்து சசிகுமார் தரப்பினர் அண்ணாதுரையிடம் வாக்குவாதம் செய்தனர்.அதில், இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆபாசமாக பேசியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், சசிகுமார், அண்ணாதுரை உட்பட எட்டு பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Dec-2024