இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
குள்ளஞ்சாவடி : பாதை தகராறு தொடர்பான மோதலில், 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர்காட்டுசாகையை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 62; அதே பகுதியை சேர்ந்தவர் குமார், 55; இரு தரப்புக்கும் இடையே வயலில் பாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.அதன்பேரில், இருதரப்பையும் சேர்ந்த குமார், அவரது மகன்கள் அஜித்குமார், சதீஷ்குமார், உறவினர்கள் செல்லத்துரை, ஜெயராமன், கலியமூர்த்தி, அவரது மகன்கள் துரை, அன்பு ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.