உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; இவர், தனது மனைவி பழனியம்மாள், 29; என்பவருடன் நேற்று முன்தினம் காய்கறி வாங்க குள்ளஞ்சாவடி கடை வீதிக்கு சென்றார். அப்போது இவர்களை குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த கரிகாலன், முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கினார். இதில் காயமடைந்த சுரேஷ் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கரிகாலன் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ