உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலையோர மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு

 சாலையோர மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு

புவனகிரி: நெடுஞ்சாலையோர மரங்களை அனுமதியில்லாமல் வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை, புவனகிரி பகுதியில் சாலையோரம் பல்வேறு மரங்கள் நடப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் பலன் தரும் மரங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களிடம் குத்தகைக்கு விடப்படுகிறது. இதனால் அரசுக்கும், குத்தகை எடுப்பவருக்கும் ஆண்டுதோறும் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது மழையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரப் பகுதியில் ஆய்வு செய்து வந்தனர். அப்போது, புவனகிரி புறவழிச்சாலையில் உள்ள வேப்ப மரத்தை மர்ம நபர்கள் வெட்டியது தெரிந்தது. இது குறித்து பரங்கிப்பேட்டை அலுவலக நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் ஜெகன் புகாரின் பேரில் புவனகிரி போலீசார் மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி