உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு

ரூ. 1 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு

பெண்ணாடம்: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைக்கூறி பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பெண்ணாடம், சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சாந்தி, 30; இவர் வாய் பேச முடியாதவர். இவரது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசிப்பவர் செந்தாமரை. இவர், சாந்தியிடம், கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய சாந்தி, செந்தாமரைக்கு 1 லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் நகையை கொடுத்தார். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் கடன் பெற்று தரவில்லை. பணம், நகையையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து சாந்தி கணவர் சீனிவாசன் பெண்ணாடம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து செந்தாமரையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !