உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவரை தாக்கிய பெண்கள் மீது வழக்கு 

முதியவரை தாக்கிய பெண்கள் மீது வழக்கு 

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே முதியவரை தாக்கிய பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மங்கலம்பேட்டை அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவுந்தரராஜன், 66. இவரது தந்தை தனவேலுக்கு சொந்தமான நிலத்தினை அதேபகுதியைச் சேர்ந்த ஜெயலலிதா, கோதண்டராமன் மனைவி கலாமணி ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, தங்கள் பெயரில் மாற்றியுள்ளனர். இதையறிந்த சவுந்தரராஜன் கடந்த மாதம் 17ம் தேதி பத்திரபதிவு அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க சென்றார். அப்போது, அவரை ஜெயலலிதா, கலாமணி ஆகியோர் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் ஜெயலலிதா, கலாமணி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை