உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் மவாத்தேகா ஷிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் கடந்த 6 மாதத்திலிருந்து 3 ஆண்டு பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி பள்ளியில் கரோத்தே கற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு கடலுார் மாவட்ட கராத்தே சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நேரு பள்ளி நிர்வாகி எழில்ராணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட துணைத்தலைவர் கராத்தே ஆசிரியர் சிகாமணி கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தகுதி பெல்ட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வெங்கடேசன், தினகரன், மதன்ராஜ், விஜய், காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ