சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மாணவிகளுக்கு ரொக்க பரிசு
கடலுார்: கடலுார், சின்னகங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி செயலாளர் மேரி நிர்மலா ராணி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சுசிலாதேவி, மனிதவள அலுவலர் சித்ரா, துறைத் தலைவர் ரமாதேவி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் ஜி.ஆர்.கே.,எஸ்டேட் நிர்வாக இயக்குனர், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். தொடர்ந்து, கல்லுாரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் காயத்ரி, பத்மினி, சுவேதா ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கினார். இதில் 3ம் ஆண்டு மாணவி காயத்ரிக்கு, படிப்பு முடித்ததும் தனது நிறுவனத்தில் பணி வழங்குவதாக கூறினார்.நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டு பிரிவு பொது மேலாளர் ஜெயக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் ஆனந்த், ஜெயச்சந்திரன், தியேட்டர் மேலாளர் கபில், துணைப் பொது மேலாளர் சோழன், தீபா, இளவரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.