மேலும் செய்திகள்
பிடிப்பட்ட மெகா சைஸ் நண்டுவாக்களி மீட்பு
26-Jun-2025
சிதம்பரம்: சிதம்பரம் அருகே நாய் கடித்து பாரம்பரிய மரபு வழி கோழிகள் இறந்தன.சிதம்பரம் அடுத்துள்ள ஒரத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இயற்கை வாழ்வியல் ஆலோசகரான இவர், அழிந்து வரும் நாட்டு கோழி இனங்களை மீட்கும் பொருட்டு, சிறுவிடை, பெருவிடை, வான்கோழி, கின்னி ஆகிய நாட்டுக்கோழிகளை வீட்டில், வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் கோழிகளை கூண்டில் அடைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது, நாய்கள் கடித்து 8 கோழிகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரத்துார் பகுதியில் வெறி நாய்கள் சுற்றித் திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Jun-2025