உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மந்தாரக்குப்பம்: கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் பாலியல் சீண்டல்களில் இருந்து தங்களை தற்காத்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கம்மாபுரம் காவல் உதவி ஆய்வாளர் பொட்டா, தலைமை காவலர்கள் நீலாவதி, சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று மாணவர்களிடையே ஆண்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு எல்லாம் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினர். பள்ளி முதல்வர் சுதர்சனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை