மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாஜி படைவீரர்களின் பிள்ளைகளுக்கு அழைப்பு
கடலுார்: மருத்துவ படிப்புகளுக்கு முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக் குறிப்பு: கேந்திரிய சைனிக் போர்டு வலைதளம் தற்போது பராமரிப்பில் இருப்பதால், எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பத்தை கே.எஸ்.பி., வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்ய இயலாது. எனவே, கேந்திரிய சைனிக் போர்டு மூலம் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் www.desw.gov.inமற்றும் DGR இணையத்தளம் www.dgrindia.gov.inஆகிய இணையத்தளங்களில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் தரவுகளுடன் தேவையான ஆவணங்களின் விவரங்களும் கூகுள் படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றுவதற்கான கடைசி தேதி வரும் 15ம் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் தகுதிப் பட்டியல் அடிப்படையில் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற தொலைபேசி வாயிலாகவே தொடர்பு கொள்ளலாம்.