உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் 3 பேர் கைது

இருதரப்பு மோதல் 3 பேர் கைது

நடுவீரப்பட்டு : முன்விரோத தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசபெருமாள்,40; அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன,40; இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மணிகண்டன், இவரது உறவினர் தங்கமணி, 42;செந்துாரபாண்டி ஆகிய மூவரும் சீனிவாசபெருமாள் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி வீட்டை கொளுத்தி விடுவதாக மிரட்டியதால் இருதரப்பும் தாக்கிக் கொண்டனர். புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து மணிகண்டன், தங்கமணி, சீனிவாசபெருமாளை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை