மேலும் செய்திகள்
பள்ளியில் நடந்த துளிர் அறிவியல் போட்டி
04-Sep-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த இருப்பு அரசு மேல்நிலை பள்ளியில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், 'துாய்மையே சேவை' நிகழ்ச்சி நடந்தது. வேளாண் அதிகாரி கலைச்செல்வி தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள், 'துாய்மையே சேவை' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் உபயோகித்த பொருட்களை எவ்வாறு கலைகளாக மாற்றி சுற்றுசூழலை துாய்மையாக வைத்திருக்கலாம் என மாணவர்களுக்கு விளக்கமளித்தார். மாணவர்களுக்கு துாய்மையை உணர்த்தும் வகையில் பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப் பட்டது.
04-Sep-2025