உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவுகள் குவிந்து கிடந்ததால் அப்செட் பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் டோஸ்

கழிவுகள் குவிந்து கிடந்ததால் அப்செட் பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் டோஸ்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஊராட்சிகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதை பார்த்து அப்செட்டான கலெக்டர், பி.டி.ஓ.,க்களுக்கு டோஸ் விட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கர்னத்தம், கோவிலானுார், ரூபநாராயணநல்லுார் ஆகிய ஊராட்சிகளை, மங்கலம்பேட்டை பேரூராட்சியுடன் இணைப்பது குறித்து கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட அவர், வரைபடம் மூலம் பேரூராட்சி எல்லை, மக்கள் தொகை குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, கர்னத்தம் ஊராட்சியில் ஆய்வுக்கு சென்றபோது, சாலையின் இருபுறம் இயற்கை உபாதைகள் மற்றும் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அப்செட்டான கலெக்டர், ஊராட்சிகளில் குப்பைகளை சுத்தம் செய்வது போல படம் மட்டும் அனுப்புறீங்க. ஆனால் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால் தான் மக்கள் பிரச்னை புரியும் என பி.டி.ஓ.,க்களுக்கு டோஸ் விட்டார்.ஆய்வின்போது, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) முருகன், (பேரூராட்சிகள்) வெங்கடேசன், தாசில்தார் உதயகுமார், பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், செயல் அலுவலர் மயில்வாகனன் உடனிருந்தனர். பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் டோஸ் விட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை