உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேஜை பந்து பயிற்சி மையம் கலெக்டர் துவக்கி வைப்பு

மேஜை பந்து பயிற்சி மையம் கலெக்டர் துவக்கி வைப்பு

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் ஸ்டார் அகாடமி மேஜைப்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் மேசைப்பந்து உபகரணங்களை வழங்கினார்.கடலுார் மாவட்டத்திற்கு மேஜைப் பந்து ஸ்டார் அகாடமி விளையாட்டு பயிற்சி மையம் அமைத்து செயல்படுத்தவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அரசு அறிவுறுத்தியது. கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் மேஜைப்பந்து மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த மேஜைப்பந்து அகாடமி பயிற்சி மையத்தில் சேர 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் மாதத்தில் 25 நாட்களுக்கு தொடர் பயிற்சியோடு, சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சி மையத்தில் மாணவர்கள், மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுனர் ஒருவருக்கு மாத ஊதியமாக 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.எனவே இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு திறமையாக பயிற்சி பெற்று நமது மாவட்டத்திற்கு பெறுமை சேர்க்க வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !