உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

பரங்கிப்பேட்டை : கல்லுாரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என அவரது உறவினர் போலீ சில் புகார் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை கருணா நிதி சாலையை சேர்ந்தவர் ஜாபர் உசேன், 50; இவரது, உறவினரின் மகள் சுஹைதா, 19; இவர், ஜாபர் உசேன் வீட்டில் தங்கி, சீர்காழியில் உள்ள விவேகானந்தா கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஜாபர் உசேன், தனியார் பஸ் கண்டெக்டர் காடுவெட்டியை சேர்ந்த முத்துகுமரன் மீது சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ் பெக்டர் பாஸ்கர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை