மேலும் செய்திகள்
கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டம்
17-Feb-2026
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வுபெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை 25 லட்சம் ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
17-Feb-2026