கல்லுாரி மாணவர்கள் திடீர் போராட்டம்
கிள்ளை; அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்தனர். சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் நேற்று காலை மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டனர். பின், குடிநீர், கழிவறை, மதில் சுவர் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிறிது நேரம் கழித்து போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.