புகார் பெட்டி...
பேரூராட்சி கவனிக்குமாபெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையை ஆக்கிரமித்து நிற்கும் தள்ளுவண்டி கடைகளால் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை தேவை.ராஜா, ஈச்சங்காடு. மேம்பாலத்தில் கும்மிருட்டுசென்னை - திருச்சி, கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் கூட்டுரோடு உள்ளது. இங்குள்ள மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.சபரி, விருத்தாசலம்.போக்குவரத்துக்கு இடையூறுநடுவீரப்பட்டு-பாலுார் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ராஜராஜன், நடுவீரப்பட்டு.குண்டும் குழியுமாக சாலைபெண்ணாடம் - ஜெயங்கொண்டம் சாலையில், பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது.பழனிவேல், தளவாய்.