புகார் பெட்டி... கடலுார்
குடிநீர் வசதி தேவைவிருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் திறக்க நகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவிபாண்டியன், விருத்தாசலம்.சுகதார சீர்கேடு சேத்தியாத்தோப்பில் உள்ள இறைச்சி கடைகளில் வெட்டப்படும் கழிவுகள் வெள்ளாறுராஜன் வாய்க்காலில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குமார், சேத்தியாத்தோப்பு. நோய் பரவும் அபாயம் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.கதிர்வேல், விருத்தாசலம்.குப்பைகளால் துர்நாற்றம் கடலுார் சீத்தாராம் நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பிரகாஷ், கடலுார்.