மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
08-Dec-2024
விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சியில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலகத்திற்கு புகார் சென்றது.அதன்பேரில், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் நகராட்சி முல்லாதோட்டம், இரட்டை தெரு, கடைவீதி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் கப், கேரி பேக் உள்ள 50 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு கடைகளுக்கு, மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
08-Dec-2024