மேலும் செய்திகள்
தவ அமுதம் பள்ளி மாணவர்கள் வெற்றி
06-Sep-2025
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக்மேல்நிலை பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணத்தில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தில் உள்ள 26 பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகளில் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் 81 பேர் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்தனர். இப்போட்டிகளில் முதலிடம் பிடித்த 21 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கி பரிசு வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பரமேஸ்வரி, ஆரோக்கிய சிலம்பரசி உடனிருந்தனர்.
06-Sep-2025