மேலும் செய்திகள்
மாணவிகளுக்கு பாராட்டு விழா
08-Nov-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான பேச்சுபோட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் நடந்தன. இதில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேச்சுபோட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பிளஸ் 1 மாணவி காயத்ரி இரண்டாமிடம், 9ம் வகுப்பு மாணவி சஞ்சனி மூன்றாமிடமும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார்,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சுப்புலட்சுமி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் ஊக்கமளித்த ஆசிரியர் மகாலட்சுமியை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி,உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
08-Nov-2025