உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

 குடிநீர் தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தேக்க தொட்டி கட்டி குடிநீர் வினியோகிக்கின்றனர். இந்நிலையில், ரூ.10 கோடி மதிப்பில் விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நகரம் முழுவதும் குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில், பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்தொட்டி கட்டப்பட உள்ளது. முதல் கட்டமாக சிவசண்முகம் நகரில் நீர் தேக்க தொட்டி பணிக்கான பூமிபூஜையை சேர்மன் ஜெயந்தி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் கிரிஜா, கவுன்சிலர் பழனியம்மாள், பணி மேற்பார்வையாளர் ரமேஷ், வி.சி.நகர செயலாளர் திருமாறன், அறிவழகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ