உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சிகளில் துவங்காத திட்ட பணிகள் ரத்து மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்

ஊராட்சிகளில் துவங்காத திட்ட பணிகள் ரத்து மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் புலம்பல்

ஊ ராட்சி தலைவர் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு ற்ற நிலையில், தற்போது அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், ஊராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் அந்தந்த பகுதியில் உள்ள சிறு ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்வது வழக்கம். ஊராட்சி தலைவர்கள் பொறுப்பில் இருந்தபோது, 15வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் பல்வேறு பணிகள் நடந்தும் வருகிறது. மேலும் சில பணிகள் பணி ஆணை வழங்கப்பட்டு துவங்கப்படாமல் இருந்து வருகிறது. முடிவுற்ற பல்வேறு பணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பில் தொகை, மாவட்ட நிர்வாகம் விடுவிக்காமல் இருந்து வருவதாக ஒப்பந்ததாரர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த ஆணை வழங்கியும் இதுவரை துவங்காமல் இருந்த பல்வேறு பணிகளை, மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது. பணிகள் நடக்காதது குறித்து விளக்கமும் கேட்காமல் திட்டப் பணிகளை ரத்து செய்து விட்டதாக ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை